மகாலட்சுமி கேட்ட அந்த கேள்வி.. செத்துபோயிடலாம்னு நினைத்தேன் - வேதனை பகிர்ந்த ரவீந்தர்!
ரவீந்தர் கைதானது குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
தயாரிப்பாளர் கைது
சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரான தயாரிப்பாளர் ரவீந்தர் சில நாட்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மோசடி செய்து விட்டார் என்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புலல் ஜெயிலுக்கு சென்றார்.
தற்பொழுது பெயிலில் வெளியே வந்த அவர் தனக்கு நடந்தது குறித்து மனம் திறந்து பேசினார். அதில் தான் ஜெயிலுக்கு போகும் போது தன்னுடைய மனைவி மகாலட்சுமி கேட்ட வார்த்தை குறித்தும் அதனால் தான் பட்ட வேதனை குறித்தும் கூறியுள்ளார்.
அவரால் 5 நிமிடம் கூட உக்கார முடியாது.. நானே பார்த்திருக்கிறேன் - பிரபலம் குறித்து ரகசியம் உடைத்த ரேகா!
பேட்டி
இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், "கைது செய்யும்போது மகாலட்சுமி என்னிடம் நீ எப்படி உட்கார்ந்து, எந்திரிக்க போற? என்று கேட்டாள். ஏனென்றால் என்னால் எல்லாரையும் போல எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. அதை நேரத்தில் ஜெயிலுக்குள் இருக்கும்போது நான் நரக வேதனையை தான் அனுபவித்து வந்தேன்.
முதல் நாள் உள்ளே போகும்போதே என்னுடைய ஆடைகளை எல்லாம் கழட்டி செக் பண்ணினார்கள். அது வழக்கமாக எல்லோருக்கும் நடக்கிறது தான். ஆனால் நான் அனுபவிக்கும் போது ரண வேதனையாக இருந்தது. தப்பே செய்யாமல் நான் ஜெயிலுக்குள் இருந்து விட்டு வந்திருக்கிறேன்.
ஜெயிலுக்குள் இருக்கும் போது முதல் ஆறு நாட்கள் நாம் செத்து விடலாம் என்று பலமுறை யோசித்து இருக்கிறேன் அந்த அளவு கொடுமைகளை அனுபவித்தேன்" என்று கூறியுள்ளார்.