ஐ அம் சாரி.. இயக்குனர் இப்படி செய்வார்னு நினைத்து பார்க்கல - நடிகை நிவேதா ஓபன் டாக்!
பிரபல நடிகை இயக்குனர் மணிரத்னம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரவும் நடிகையான நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து பொதுவாக என்மனசு தங்கம் என்ற படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடித்தவன், விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், பிரபுதேவாவுடன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அதேபோல் அருண்விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ரெட் படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், இவர் பல தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
பேட்டி
இந்நிலையில், நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில், "பொன்னியின் செல்வன் பூங்குழலி கதாபாத்திரத்துக்கு என்னை முதலில் ஆடிஷன் செய்தார்கள். முதலில் என்னிடம் ஸ்க்ரிப்ட்டை கொடுத்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அதை படித்தேன். பிறகு வசனத்தை 20 நிமிடங்கள்வரை மனப்பாடம் செய்தேன். அதன் பின் மணிரத்னத்தின் உதவி இயக்குநர் வந்து ரெடியா என்று கேட்டார்.
நான் தயார் ஆனேன். அந்த சமயத்தில் மணிரத்னம் சாரும் வந்துவிட்டார். வந்தவர் என்னிடம் 'மன்னிச்சுடுங்க' என்று வசனம் சொல்ல சொன்னார். நான் உடனே ஆங்கிலத்தில் ஐ அம் சாரி என்று சொல்லிவிட்டேன்.
உடனே மணிரத்னம் சார் அவ்வளவு சத்தமாக சிரித்தார். இதுவரை அவர் அப்படி சிரித்து நான் பார்த்ததே இல்லை. எனக்கு ரொம்பவே பதற்றமாகிவிட்டது. நான் அவரிடம் சார் என்னை ஆடிஷன் செய்யாதீர்கள். எங்கேயாவது கூட்டத்தில் ஓரமாக நிற்க வையுங்கள் போதும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.