Saturday, May 10, 2025

பிரபல நடிகையை கதற விட்ட இயக்குனர் ஷங்கர் - ஓப்பனாக பேசிய நடிகர்!

Shankar Siddharth
By Vinothini 2 years ago
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் அவரது படத்தின் ஹீரோயினை அழ வைத்தது குறித்து பிரபல நடிகர் பேட்டியில் கூறியுள்ளார்.

ஷங்கர்

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஷங்கர். அவர் இயக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் கொடுக்கும் படங்களாகவே அமைவதால் மக்கள் மத்தியில் ஷங்கருக்கு நல்ல வரவேற்பு உண்டு.

actor-shares-about-his-experience-in-shankar-movie

அதனால் நடிகர்கள் அவரது படங்களுக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர் எடுத்த படங்களில் ஹிட் கொடுகாத படம் பாய்ஸ். அதில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சித்தார்த் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

கதறிய நடிகை

இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "பாய்ஸ் படம் நடிகை ஜெனிலியாவுக்கு முதல் படம், ஜெனிலியா தினமும் டயலாக் பேப்பரை பார்த்த உடனேயே ஷாக் ஆகிவிடுவார்.

actor-shares-about-his-experience-in-shankar-movie

நான் தான் அவருக்கு வசனங்களை எல்லாம் தமிழில் சொல்லி தருவேன். ஒருமுறை இரண்டு பக்க கடினமான வசனத்தை ஜெனிலியாவிடம் கொடுத்துவிட்டார் ஷங்கர்.

அதை பார்த்த உடனேயே அழ துவங்கிவிட்டார் ஜெனிலியா. அதன் பிறகு அவரை சமாதானம் செய்து அவருக்கு வசனங்களை சொல்லி கொடுத்தேன்" என்று கூறியுள்ளார்.