அடேங்கப்பா.. வெறும் 50 வினாடிக்கு ரூ.5 கோடி வாங்குறாரா நயன்தாரா? - ஷாக் தகவல்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
வெறும் 50 வினாடிக்கு நடிகை நயன்தாரா ரூ.5 கோடி வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான நயன்தாரா டாப் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்பொழுது திரையுலகில் உச்சத்தில் உள்ளார்.
இவர் முதலில் நடிகர் பிரபுதேவாவை காதலித்தார், பின்னர் சிம்புவை காலிது வந்தார். தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு தற்பொழுது 2 ஆண் குழந்தைகள் உள்ளார். இவர் சமீபத்தில் அவர்களது பிறந்தநாளை கொண்டாடி குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டார்.
சம்பளம்
இந்நிலையில், நடிகை நயன்தாரா சமீபத்தில் நடித்த ஜவான் படத்திற்கு ரூ.10 கோடி வாங்கியதாக தகவல் வெளியானது. நயன்தாராவின் தற்போதைய சொத்து மதிப்பு மொத்தம் ரூ.200 கோடி என்று கூறப்படுகிறது.
சமீபகாலத்தில் இவர் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார், இதில் இவர் 50 வினாடிகளுக்கு வரும் விளம்பரத்திற்கு ரூ.5 கோடி வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருபுறம் தனது தொழில் வாழ்க்கையில் பிஸியாக இருக்கும் இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தனது ரசிகர்களுக்கு அப்டேட்களை கொடுத்து வருகிறார்.