கமல்ஹாசன், எம்ஜிஆருடன் நடித்த நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு!

Tamil Cinema Tamil Actress Actress
By Vinothini Sep 27, 2023 06:42 AM GMT
Report

பழம்பெரும் நடிகைக்கு திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை வஹீதா

செங்கல்பட்டு மாவட்டத்தில், 1938-ம் ஆண்டு பிறந்த நடிகை வஹிதா ரஹ்மான், பழம்பெரும் நடிகையான இவர் எம்ஜிஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் நடித்தார்.

dadasaheb-phalke-award-for-waheeda-rehman

இந்தியில் ரேஷ்மா ஆர் ஷேரா என்ற படத்தில் நடித்தார், அதற்கு 1971-ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் வஹிதா நடித்துள்ளார்.

எல்லாருக்கும் அட்ஜஸ்ட் பண்ணீங்க.. நான் மட்டும் இளிச்சவாயனா? - இயக்குனர் பேட்டி!

எல்லாருக்கும் அட்ஜஸ்ட் பண்ணீங்க.. நான் மட்டும் இளிச்சவாயனா? - இயக்குனர் பேட்டி!

விருது

இந்நிலையில், இவர் 1972-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றார். 2011-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. மேலும், இவர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் -2 படத்திலும் நடித்திருந்தார்.

dadasaheb-phalke-award-for-waheeda-rehman

தற்பொழுது சினிமா துறைக்கு வஹீதா அளித்த பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தாதா சாஹேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.