40 வயதில் கல்யாணத்திற்கு ரெடியான எஸ்.ஜே.சூர்யா பட நாயகி - குவியும் வாழ்த்துக்கள்!
நடிகை நிலா தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடிகை நிலா
தமிழ் சினிமாவில் 2005ல் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான அன்பே ஆருயிரே படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிலா. தொடர்ந்து, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்தார். கடைசியாக கில்லாடி படத்தில் நடித்திருந்தார். 40 வயதாகும் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார்.
திருமணம்?
தற்போது, தனது திருமணம் பற்றி அறிவித்திருக்கிறார். அதன்படி வரும் மார்ச் மாதம் ராஜஸ்தானில் நிலாவின் திருமணம் நடக்கவிருக்கிறது.
இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். முன்னதாக, பட வாய்ப்பு பெரிதாக எதுவும் இல்லாததால் தனது தந்தையின் தொழிலை அவர் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.