குளிக்க 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்ட நடிகை; நின்றுபோன ஷூட்டிங் - கெஞ்சிய தயாரிப்பாளர்!
ஜாம்பவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை நிலா குளிப்பதுபோன்ற காட்சி ஒன்றுக்கு மினரல் வாட்டர் கேட்டார் என்ற செய்தி பரவி வருகிறது.
நடிகை நிலா
எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிலா. தொடர்ந்து ஜாம்பவான், மருதமலை, ஜகன்மோகினி, இசை, கில்லாடி உள்ளிட்ட படங்களை நடித்தார்.
தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் நந்தகுமார் இயக்கி நடிகர் பிரஷாந்த், விஜயகுமார், விவேக் உள்ளிட்டோர் நடித்த ஜாம்பவான் படத்தில் ஹீரோயினாக நிலா நடித்திருந்தார். அந்த படத்தில் குற்றாலத்தில் குளிப்பது போன்ற ஒரு காட்சிக்கு மினரல் வாட்டர் கேட்டு நிலா பிரச்சனை செய்ததாக செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
அந்த செய்தியை படத்தின் இயக்குநர் நந்தகுமார் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. அதாவது, ஜாம்பவான் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி குற்றாலத்தில் படமாக்கப்பட்டது. அதில் காட்சியில் நிலாவும் அவரது தோழிகளும் குளிக்கும்போது, பிரசாந்த் அங்கு வந்ததும் தோழிகள் ஓடிவிட நிலா அந்த தொட்டிக்குள் மொழுகுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
மினரல் வாட்டர் விவகாரம்
அப்போது நிலா ஒரு கண்டீஷன் போட்டுள்ளார். அதில் "இந்தத் தண்ணீரில் நான் குளிக்க மாட்டேன். அப்படி இங்கு குளிக்க வேண்டும் என்றால் தொட்டியில் மினரல் வாட்டரை ஊற்றுங்கள் என்று நிலா கூறினாராம்.
அதற்கு இயக்குநர் "12,000 லிட்டர் மினரல் வாட்டர் வேண்டும் என்றால் தயாரிப்பாளர் நிலை என்னாவது. இது அவரது முதல் படம் என்று கூறியுள்ளார். ஆனால் நிலா, நான் நடிக்க மாட்டேன் என்று கூறி படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே கிளம்பி சென்று விட்டாராம். படத்தின் தயாரிப்பாளரும் ஹோட்டலுக்கு சென்று நிலாவிடம் கெஞ்சியுள்ளார். அப்படியிருந்தும் நிலா ஒத்துக்கொள்ளவில்லையாம். அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்களிடம், ஜாம்பவான் தயாரிப்பாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார் என்றும் பொய் குற்றச்சாட்டு வைத்தாராம்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தயாரிப்பாளர் தியாகராஜன் ஜாம்பவான் தயாரிப்பாளரை அழைத்துக்கொண்டு டெல்லி சென்று நிலாவிடம் சமாதானம் பேசியுள்ளார். அப்போதும் நிலா வைத்த கண்டிஷன் என்னவென்றால், இந்தியாவில் என்னால் நடிக்க முடியாது பாங்காக் சென்றால் நடிப்பேன் என கூறியதால் வேறு வழியில்லாமல் அந்த காட்சிக்காக பாங்காக் சென்று ஷூட்டிங் நடத்தியதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.