நீ நாசமா போய்டுவனு திட்டினாங்க.. எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது - நடிகை நீலிமா ஓபன் டாக்!
நடிகை நீலிமா தனது சினிமா வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நீலிமா ராணி
தமிழ் சினிமாவில் நடிகர் கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் அதிரடி காட்டி வருகிறார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த அனுபவங்களை கூறியுள்ளார். அதில் அவர், "என்னை பார்த்தாலே கண்டிப்பா என்கிட்ட பேசணும்னு கிட்ட வருவாங்க.. அதிலும் ஒரு பாட்டி திட்டுனாங்க அதை என்னால மறக்கவே முடியாது. நீ நாசமா போய்டுவ அப்டினு சொல்லிட்டாங்க. எனக்கு ஒருமாதிரி ஆகிருச்சு..

நம்ம அவ்வளவு கேவலமாவா பண்ணிட்டோம்னு நினைத்தேன். அதன்பின் அதுவும் ஒரு புகழ்ச்சி மாதிரி தானே.. அவங்களுக்கு அப்படி தான் புரிஞ்சிருக்கு அதுனால சரினு திட்டு வாங்கிட்டு வந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan