விக்கிய கல்யாணம் பண்ணேன்; இதுவர அவர் அது கேட்டதே இல்ல.. - நயன்தாரா ஓபன் டாக்!
தனது கணவர் விக்னேஷ் சிவன் குறித்து நடிகை நயன்தாரா பேசியுள்ளார்.
நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஆரம்பம் முதல் தற்போது வரை ஹாட் டாப்பிக்கிலேயே இருந்து வருகிறார்.

விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதற்கு பிறகும் கேரியரில் பிஸியாகவே இருந்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட்டில் களமிறங்கினார். மேலும், நடிப்பில் மட்டுமின்றி பிற தொழில்களிலும் கவனம் செலுத்தி முதலீடு செய்துவருகிறார்.
அந்த வகையில், அவரும், விக்னேஷ் சிவனும் இணைந்து 9 ஸ்கின் என்ற நிறுவனத்தையும், Femi 9 என்ற சானிட்டரி நாப்கின் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், Femi 9 பிராண்டின் தொடக்க விழா நடந்தது.
நெகிழ்சசி
அதில் தனது கணவர் விக்னேஷ் சிவன் குறித்து பேசிய நயன்தாரா "எப்பவுமே நம்ம காதில் விழுகிற ஒரு விஷயம் "எல்லா ஆணுடைய வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்க" அப்படின்னுதான்.

ஆனால் ரொம்ப சந்தோஷமா இருக்கிற எல்லா பெண்களுக்கு பின்னாடியும் கண்டிப்பா ஒரு ஆண் இருப்பாங்க. நான் ரொம்ப வருஷமா சினிமால நடிச்சிட்டு இருக்கேன். நடுவுல தான் நான் விக்னேஷை மீட் பண்ணேன்.. கல்யாணம் பண்ணேன்.
என்னைக்கு அவர மீட் பண்ணேனோ, அன்னைல இருந்து இன்னும் மிகப்பெரிய விஷயங்கள் பண்ணனும்தான் எனக்கு கத்து குடுத்துருக்காரு. இது ஏன் பண்றீங்க, அது எதுக்கு பண்றீங்கன்னு என்னைக்குமே கேட்டது இல்ல" என்று நயன்தாரா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil