'நான் மட்டுமல்ல எனது கணவரும் கர்ப்பமாக உள்ளார்' - பகீர் கிளப்பிய அமலா பால்!!
நடிகை அமலா பாலின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வரலாகி வருகிறது.
அமலா பால்
மலையாள நடிகையான அமலா பால் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் மைனா, தெய்வ திருமகள்,தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர். தனது 32வது பிறந்தநாளில் அமலாபால் தனது காதலர் ஜெகத் தேசாயுடன் 2வது திருமணத்தை அறிவித்தார்.
கணவரும் கர்ப்பம்
தொடர்ந்து இருவரும் கடந்த நவம்பர் 3-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

அதனையடுத்து தனது கணவருடனான கர்ப்பகால புகைப்படங்களை அவர் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அமலா பாலின் நேற்றைய பதிவு இணையத்தில் வரலாகி வருகிறது.
அதில் "நான் மட்டுமல்ல எனது கணவரும் கர்ப்பமாக உள்ளார்” என்று தனது கணவர் தொப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil