இந்த அழகிய குழந்தை யாருனு தெரியுதா? 90'களில் கலக்கிய முன்னணி நடிகை!
80 மற்றும் 90'களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நதியாவின் இயற்பெயர் சரீனா ஆகும்.
முன்னணி நடிகை
பிரபல நடிகர், நடிகைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் அவ்வப்போது சமுக வலைத்தளங்களில் வெளியாகி வியப்பை ஏற்படுத்தும் . அந்த வகையில் தற்போது பிரபல நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1985-ம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நதியா . இதனையடுத்து சின்ன தம்பி பெரிய தம்பி,ராஜாதி ராஜா ,பாடு நிலவே, உள்ளிட்ட படங்களில் நடித்து 80 மற்றும் 90'களில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தனது வசிகர அழகால் கவர்ந்த நடிகை நதியா ரசிகர்கள் இன்றுவரை ஏராளமானவர்கள் உள்ளனர். நடிகை நதியா ,தமிழ், தெலுங்கு ,மலையாள படங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
வைரல்
1988 ஆம் ஆண்டு திருமணம் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். கடைசியாக நடிகை நதியா ரஜினியுடன் ராஜாதி ராஜா என்ற படத்தில் நடித்தார்.இந்த படம் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்தது.

திருமணத்திற்குப் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவிற்கு நடிக்காத இருந்த நடிகை நதியாவை மீண்டும் 'எம் குமரன்' படத்தில் ரீஎண்டரி கொடுத்தார். தொடர்ந்து தாமிரபரணி,சண்டை,பட்டாளம் என தற்போது வரை பல படங்களில் நடிகை நதியா நடித்துள்ளார். கடைசியாக தோனி தயாரிப்பில் 'எல்ஜிஎம்' படத்தில் இவர் நடித்திருந்ததார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan