இந்த நோய் இருக்கு; அதனால் திருமண வாழ்கையில் இருக்க முடியாது - ரகசியம் உடைத்த மும்தாஜ்!

Tamil Cinema Mumtaj
By Sumathi Apr 06, 2024 02:30 PM GMT
Report

திருமணம் செய்து கொள்ளாதது குறித்து மும்தாஜ் மனம் திறந்துள்ளார்.

நடிகை மும்தாஜ்

நடிகை மும்தாஜ்(43) தமிழ் சினிமாவில் ‘மோனிசா என் மோனோலிசா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

mumtaj

இதனையடுத்து, குஷி, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிப்பில் ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

கடைசியாக தமிழில் நடிகர் லாரன்ஸ் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் வலம் வருகிறார்.

நான் இப்படி இருக்க காரணமே அவர்தான்.. மெல்ல மெல்ல மாத்தினாரு - நடிகை மும்தாஜ்

நான் இப்படி இருக்க காரணமே அவர்தான்.. மெல்ல மெல்ல மாத்தினாரு - நடிகை மும்தாஜ்

திருமணம் 

இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், வாழ்க்கையில் நான் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன். ஒரு கட்டத்தில் இறைவனை நாட தொடங்கினேன். நான் திருமணம் செய்து கொள்ளாதது பற்றி என்னென்னவோ பேசுகிறார்கள்.

இந்த நோய் இருக்கு; அதனால் திருமண வாழ்கையில் இருக்க முடியாது - ரகசியம் உடைத்த மும்தாஜ்! | Actress Mumtaj About Marriage And Disorder

எனக்கு 25 வயது இருக்கும் போது ‘ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர்’ நோய் இருப்பது தெரிய வந்தது. இதனால் திருமண வாழ்கையில் இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். இதுதான் நான் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம்.

மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதை பார்க்கும்போது, எனக்கும் அப்படி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் மனரீதியாக நான் அதற்கு தயாராக இல்லை என்பதே உண்மை எனத் தெரிவித்துள்ளார்.