நான் இப்படி இருக்க காரணமே அவர்தான்.. மெல்ல மெல்ல மாத்தினாரு - நடிகை மும்தாஜ்

Tamil Cinema Mumtaj
By Sumathi Mar 08, 2024 11:05 AM GMT
Report

நடிகை மும்தாஜ் சினிமாவில் இருந்து விலகிய காரணம் குறித்து பேசியுள்ளார்.

நடிகை மும்தாஜ் 

நடிகை மும்தாஜ்(43) தமிழ் சினிமாவில் ‘மோனிசா என் மோனோலிசா’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனையடுத்து, குஷி, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

actress mumthaj

கவர்ச்சி நடிப்பில் ரசிகர்களை தன்வசப்படுத்தினார். கடைசியாக தமிழில் நடிகர் லாரன்ஸ் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும்.

அந்த காரணத்தினால் தான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல - மும்தாஜ் பளீச்!

அந்த காரணத்தினால் தான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல - மும்தாஜ் பளீச்!

சினிமா விலகல்

ஆரம்பத்தில் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிற விஷயத்தின் அர்த்தம் தெரியாமலே இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அது புரிய ஆரம்பித்தபோது எனக்குள் மெல்ல மெல்ல மாற்றம் தொடங்கியது. அதன் காரணமாக தான் நான் சினிமாவில் இனி இருக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தேன்.

நான் இப்படி இருக்க காரணமே அவர்தான்.. மெல்ல மெல்ல மாத்தினாரு - நடிகை மும்தாஜ் | Actress Mumthaj About Reason Of Quit Cinema

நான் சினிமாவை கைவிடுவதற்கு அல்லாஹ் தான் காரணம். அவர் என்னிடம் மெல்ல மெல்ல சில மாற்றங்களை ஏற்படுத்தினார். ஒருநாள் வீட்டில் அமர்ந்திருக்கும் போது நானே என்னை அறியாமல் என் உடையை சரி செய்தேன். வெளியே செல்லும்போது கண்ணியமாக உடை அணிந்தேன். சினிமாவில் நீச்சல் உடை அணிந்து நடித்த ஒருத்தி இப்படிப்பட்ட உடை அணிவது நிச்சயம் எல்லோருக்கும் வித்தியாசமாகத்தான் இருக்கும் எனப் பேசியுள்ளார்.