அந்த காரணத்தினால் தான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல - மும்தாஜ் பளீச்!
தான் திருமண செய்துக்கொள்ளாதது குறித்து நடிகை மும்தாஜ் பேசியுள்ளார்.
நடிகை மும்தாஜ்
நடிகை மும்தாஜ்(43) தமிழ் சினிமாவில் ‘மோனிசா என் மோனோலிசா’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனையடுத்து, குஷி, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி நடிப்பில் ரசிகர்களை தன்வசப்படுத்தினார். கடைசியாக தமிழில் நடிகர் லாரன்ஸ் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திருமணம்?
அதன்பின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் வலம் வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணம் செய்து கொள்ளும் ஐடியா ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு, எனக்கு திருமணம் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம். எனக்கு திருமணம் செய்து கொள்வதற்குண்டான யோசனையே இல்லாமல் இருப்பது தான்.
எத்தனையோ ப்ரபோசல்கள் வந்துள்ளது. ஆனால், இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் யோசனையே என்னிடம் இல்லை என்று பதிலளித்துள்ளார்.