50 வயசாகியும் கல்யாணம் செஞ்சுக்கல; திருமணத்தை வெறுத்த பிரபல நடிகைகள் - இதுதான் காரணமா!
சில நடிகைகள் திருமணம் என்ற பந்தத்தில் இருந்து விலகியே உள்ளனர்.
மும்தாஜ்
தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபலமாக வலம் வந்தவர். பல படங்களில் கேமியோ பாடலுக்கு நடனமாடி அசத்தியவர். தற்போது இவருக்கு 42 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்.
நக்மா
இந்தி சினிமாவில் அறிமுகமாகி 1994-ம் ஆண்டு தமிழில் வெளியான காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். முன்னணி நடிகையாக இருந்த காலக்கட்டத்தில் பல காதல் கிசுக்கிசுக்களை சந்தித்துள்ளார். தற்போது 48 வயதாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.
ஷோபனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தொடர்ந்து இது நம்ம ஆளு, சிவா, என்கிட்ட மோதாதே, தளபதி, துறைமுகம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 16 வருடங்களுக்கு பிறகு சிம்புவின் போடா போடி படத்தில் ரீ-என்டரி ஆனார். 53 வயதாகியும் தற்போது வரை திருணம் செய்துகொள்ளவில்லை. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.
கெளசல்யா
காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, வானத்தைபோல, என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 43 வயதாகும் நிலையில், இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆன்மீகத்தில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
தபு
காதல் தேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். கண்டுகொண்டேன் படத்தில் நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 52 வயதாகும் தற்போதுவரை திருமணம் செய்துகொளள்வில்லை. காதல் தோல்வியால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.