நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமை நடக்கிறது... - போலீசில் பரபரப்பு புகார் - சிறுமிகள் கதறல்

By Nandhini May 11, 2022 06:39 AM GMT
Report

நடிகை மும்தாஜ் தமிழ் சினிமாவில் ‘மோனிசா என் மோனோலிசா’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருடைய கவர்ச்சி நடிப்பில் ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

இதனையடுத்து, குஷி, வேதம், சாக்லேட், மிட்டா மிராசு, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

இந்நிலையில், மும்தாஜ் வீட்டு பணிப்பெண்ணான முக்தீன், இன்று காலை காவல்துறையின்‌ அவரச உதவி எண்ணான 100க்கு தொலைபேசி மூலம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த போனில், எனக்கு நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமைகள் நடக்கிறது என்று கதறி அழுதார்.

இதனையடுத்து நடிகை மும்தாஜ் வீட்டிற்கு அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அந்தப் பெண் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவரும் 17 வயதான இளைய சகோதரியும் மும்தாஜ் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்து வருவதாகவும், தெரிவித்தனர்.

கடந்த 6 ஆண்டுகளாக மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்ணாக இருப்பதாகவும் கூறினர். மேலும், இனி மும்தாஜ் வீட்டில் இருக்க முடியாது என்றும், எங்களுக்கு இங்கு கொடுமைகள் நடப்பதாகவும் கூறி அழுதுள்ளனர்.

அங்கிருந்து மீட்ட போலீசார் அப்பெண்களை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அரசு காப்பகத்தில் உள்ள அந்தப் பெண்ணிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் அளித்த பெண் கடந்த 6 ஆண்டுகளாக சிறுமியாக இருந்த போதிலிருந்தே மும்தாஜ் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளதால், குழந்தை தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நடிகை மும்தாஜ் வீட்டில் கொடுமை நடக்கிறது... - போலீசில் பரபரப்பு புகார் - சிறுமிகள் கதறல் | Mumtaj Complaint Of Agitation