42 வயது.. 2 விவாகரத்து; பிரபல நடிகைக்கு 3-வது திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை மீரா வாசுதேவன் ஒளிப்பதிவாளர் விபின் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மீரா வாசுதேவன்
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் மீரா வாசுதேவன். இவர் உன்னில் சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும், ஜெரி, ஆட்டநாயகன், அடங்கமறு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் சூரிய வம்சம், சித்தி 2, காவேரி ஆகிய சீரியல்களிலும் மீரா வாசுதேவன் நடித்துள்ளார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு விஷால் அகர்வாலை திருமணம் செய்துகொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே கருத்துவேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர்.
திருமணம்
இதனையடுத்து நடிகர் ஜான் கொகேனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கையும் சில பிரச்சனையால் முறிந்துபோனது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர் விபின் என்பவரை மீரா வாசுதேவன் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமணத்தில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.