விஜயகாந்தா.. அப்போ வாய்ப்பு இல்ல; வடிவேலுவ எட்டி மிதிச்சிருப்பேன் - விளாசிய நடிகர்!
நடிகர் வடிவேலு குறித்து நடிகை மீசை ராஜேந்திரன் பேசியுள்ளார்.
நடிகர் வடிவேலு
வைகைப்புயல் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் வடிவேலு,காமெடியனாக மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்தார். மாமன்னன் படத்தில் இவரின் மாறுபட்ட சிறப்பான நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் வடிவேலு குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது "நான் வடிவேலுவை பார்க்க போனப்போ அவர் ஒரு சேரில் உட்கார்ந்து இன்னொரு சேரில் கால் ரெண்டையும் வச்சுட்டு ஆட்டிக்கிட்டே இருக்காரு. நான் அவர்கிட்ட "அண்ணே வணக்கம்.. நேற்று என்னை வரச்சொன்னீங்க" என்று சொன்னேன்.
எட்டி மிதிச்சிருப்பேன்
அதற்கு வடிவேலு "நீங்கல்லாம் விஜயகாந்த் கூட இருக்கீங்க. உங்களுக்கெல்லாம் வாய்ப்பு இல்ல.. போங்க" அப்படின்னு சொன்னாரு. அப்போ நான் "அண்ணே இதெல்லாம் மரியாதை இல்ல.. எனக்கு பண்ணுன மாதிரி வேற எந்த நடிகர்களுக்கும் பண்ணாதீங்க.. இதெல்லாம் தப்பு" என்று சொன்னேன்.
எனக்கு வந்த கோவத்துக்கு வடிவேலுவை அப்படியே ஒரு மிதி மிதிச்சாரலாம்னு இருந்துச்சு. ஆனால் அவரு டாப்புல இருக்காரு. இந்த சம்பவம் நடந்து 2 நாள் முடிச்சு நான் விஜயகாந்த் அலுவலகத்துக்கு போனேன். அப்போ கேப்டன் என்கிட்ட என்ன நடந்துச்சுனு கேட்டாரு. நான் இந்த மாதிரி நடந்துச்சு கேப்டன் என்று சொன்னேன்.
அதற்கு அவர் "நீ சும்மா விட்டுட்டு வந்தியா? அப்படினு கேட்டாரு. இல்ல கேப்டன் அவரு பெரிய நடிகர், ஏதாவது நடிகர் சங்கம் பிரச்சனை வந்துரும் என்று சொன்னேன். அதற்கு கேப்டன் "என்ன பெரிய நடிகர் சங்கம்.. எது பண்ணாலும் நான் இருக்கேன்னு சொன்னாரு" என்று தெரிவித்துள்ளார்.