அவருக்காக தான் அட்ஜஸ்ட் பண்ணேன்; செட் ப்ராப்பர்ட்டி மாதிரி.. போட்டுடைத்த நடிகை கிரண்!
ஆம்பள திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகை கிரண் பேசியுள்ளார்.
நடிகை கிரண்
ஜெமினி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரின் மார்க்கெட் சட்டென சரிந்தது. பின்னர் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார்.
தற்போது மீண்டும் பட வாய்ப்பே ஏதும் இல்லாமல் இருக்கிறார். நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கிரணிடம் "இந்த படத்தில் ஏன் நடித்தேன் என்று யோசித்த படம் எது? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
வருத்தம்
அதற்கு பதிலளித்த அவர் "ஆம்பள படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன். சுந்தர் சி அண்ணன் என்னுடைய அண்ணன் போன்றவர், அதனால், ஆம்பள படத்தில் நடிக்க கேட்ட போது நான் அவரிடம், எந்த கதாபாத்திரம் இருந்தாலும் கொடுங்கள் என்று சொன்னேன்.
அந்த கதாபாத்திரம் திருப்தி இல்லை என்றாலும், அவருக்காக அட்ஜஸ்ட் செய்து நடித்தேன். ஆனால், அவர் ஆம்பள படத்தில் ஏதோ செட் பிராப்பரிட்டியாக மட்டுமே நடிக்க வைத்து இருந்தார். என்னால் அந்த படத்தில் எதுவும் செய்ய முடியவில்லை. ஏன் நடித்தோம் என பல நாள் வருத்தப்பட்டு இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.