சமந்தா தோத்துடும்; 47 வயது.. புஷ்பா பாடலுக்கு ஆட்டம் போட்ட மீனா - வைரல் Video!

Jiyath
in பிரபலங்கள்Report this article
புஷ்பா 2 படத்திலிருந்து சமீபத்தில் வெளியான பாடலுக்கு நடிகை மீனா நடனமாடியுள்ளார்.
புஷ்பா 2
சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சியாக நடனமாடியிருந்தார்.
இதனால் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் சமந்தாவின் நடனம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாலான "புஷ்பா புஷ்பா புஷ்பா ராஜ்" என்ற பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
நடிகை மீனா
இந்த பாடலுக்கு நடிகை மீனா நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். மேலும், சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மீனா நடனமாடியுள்ளார் என்றும்,
47 வயது நடிகை போல தெரியவில்லை, 30 வயது ஹீரோயின் போல இருக்கிறீர்கள் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். புஷ்பா 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.