சின்ன வயசுலயே அத பார்த்துட்டேன்.. இப்போதான் உணர்ந்தேன் - நடிகை சமந்தா பளீச்!
தனது திரைத்துறை பயணம் குறித்து நடிகை சமந்தா பேசியுள்ளார்.
நடிகை சமந்தா
தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை வெகுநாள் நீடிக்கவில்லை.
கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். இதற்கிடையில் பல ஹிட் படங்களில் நடித்து வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் புதிய படங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஓய்வில் இருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படம் வெளியாகியிருந்தது. சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து தற்போது மீண்டும் சமந்தா நடிக்க வந்து இருக்கிறார்.
புதிய இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், அவர் நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனது திரைத்துறை பயணம் குறித்து பாட்காஸ்டில் சமந்தா பேசியுள்ளார்.
பயம் இருந்தது
அவர் கூறியதாவது "எனது குழந்தை பருவத்தில் நான் சொகுசாக இருந்ததில்லை. நிறைய கஷ்டங்களை பார்த்துதான் வளர்ந்தேன். அதனால், எப்படியாவது வாழ்க்கையில் சாதித்துவிட வேண்டும் என்பதில்தான் என் முழு கவனமும் இருந்தது.
22-23 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தேன். அந்த சமயத்தில் இந்த துறை பற்றியெல்லாம் பெரிதாக ஏதும் தெரியாது. கடுமையாக உழைக்க வேண்டும் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்பது மட்டும்தான் மனதில் இருந்தது. திரைத்துறையில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு அதை தக்க வைத்துக் கொள்ள இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
அதை செய்யவில்லை என்றால் மீண்டும் பழைய நிலைமைக்கு சென்றுவிடுவோம் என்ற பயம் இருந்தது. இந்த திரைத்துறையில் கடுமையாக உழைத்தால் தான் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன். நாம் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.