ஆசை இருந்துச்சு; அரவிந்த்சாமி கூட நடிக்காததுக்கு காரணம்.. போட்டுடைத்த மீனா!

Jiyath
in பிரபலங்கள்Report this article
அரவிந்த் சாமியுடன் நடிக்காமல் இருந்ததற்கான காரணம் குறித்து நடிகை மீனா பேசியுள்ளார்.
நடிகை மீனா
90ஸ்-களில் பலரின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. 1990-ல் ஒரு புதிய கீதை என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மீனா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் அரவிந்த் சாமி குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் "அரவிந்த்சாமியோடு ஒரு படத்தில் கூட நான் நடிக்கவில்லை.
கால்ஷீட் பிரச்சனை
அவரோடு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன் .அந்த நேரத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனக்கு கால்ஷீட் பிரச்சனை இருந்தது. அப்போது நான் வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், அரவிந்த் சாமியின் படத்தில் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
ரோஜா படத்தில் அவருடைய நடிப்புக்கு நான் ரசிகையாக மாறிவிட்டேன். அதற்கு பிறகு தான் அவரோடு நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், என்னுடைய மகள் அவருடைய படத்தில் நடித்து விட்டாள். பாஸ்கர் என்ற ராஸ்கல் படத்தில் அமலா பாலுக்கு மகளாக என்னுடைய மகள் தான் நடித்திருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.