கணக்காளரை திருமணம் செய்த நடிகை மீரா நந்தன் - ரசிகர்கள் வாழ்த்து!
மலையாள நடிகை மீரா நந்தனுக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது.
மீரா நந்தன்
வால்மிகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மீரா நந்தன். தொடர்ந்து அய்யனார், சண்ட மாருதம், காதலுக்கு மரணமில்லை, நேர்முகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் லண்டனில் கணக்காளராக வேலை பார்க்கும் ஸ்ரீஜு என்பவருக்கு நடிகை மீரா நந்தனுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமணம்
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவில் இன்று காலை இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களை மீரா நந்தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி கேரளாவில் உள்ள கொச்சியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil