படு நெருக்கமான படுக்கை காட்சி; அந்த சீன்ல அப்பாஸ்... மாளவிகா பளீச்!
திருட்டு பயலே படம் குறித்து மாளவிகா மனம் திறந்துள்ளார்.
நடிகை மாளவிகா
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. 10 வருடங்களில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உன்னைத்தேடி படத்தில் அறிமுகமாகி, பூங்காற்றே, ரோஜாவனம் என நடித்து அதிக ஹிட் படங்களை கொடுத்தார்.

இவர் நடனமாடிய வாளமீனுக்கும் வெளங்கமீனுக்கும் பாடல் இன்றளவும் அதே வைப்பில் உள்ளது. இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே அமைந்தது. 2007ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ், அன்யா என 2 குழந்தைகள் உள்ளனர்.
சினிமாவிலிருந்த விலகியிருந்த இவர் சமூக வலைத்தள பக்கத்தில் அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், திருட்டுப் பயலே திரைப்படத்தின் எனக்கு வில்லி போன்ற கதாபாத்திரம் கிடைத்திருந்தது.
திருட்டு பயலே
நான் அந்த கேரக்டரை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று நடித்தேன். அந்தப் படத்தில் அப்பாஸூடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் நான் மிகவும் சௌகரியமாக நடித்தேன். காரணம் என்னவென்றால், அப்பாஸ் என்னுடைய நெருங்கிய நண்பர்.

அந்த இடத்தில் வேறு எந்த கதாநாயகன் இருந்தாலும், என்னால் அவருடன் நடித்தது போன்று, மிகவும் சௌகரியமாக நடித்திருக்க முடியுமா என்றால், அது கேள்விக்குறிதான். நானும் அப்பாஸூம் முன்பிருந்தே நன்றாக பழகி வந்திருந்தோம். இரண்டு பேரும் நிறைய பார்ட்டிகளில் சந்தித்து இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan