வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் மாளவிகா - வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல சூப்பர் சிங்கர் மாளவிகா தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் தற்போது முன்னணி பாடகர்களாக உருவெடுத்துள்ளனர். அந்த வகையில், சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மாளவிகா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார். பின்னர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மனம் கொத்தி பரவை படத்தில் டங் டங் என்ற பாடலை பாடி மேலும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் அவரது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு மோசடி! குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை IBC Tamil
சிரிலிய சவிய கணக்கு முடக்கத்தால் மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாக ராஜபக்ச தரப்பின் ஒரு அறிக்கை IBC Tamil