பட வாய்ப்பிற்காக தப்பு பண்ணியிருக்கேன்; இதை சொல்ல தயக்கம் இல்லை - மாளவிகா மேனன் ஓபன்டாக்!
பட வாய்ப்பு குறித்து தனது அனுபவத்தை நடிகை மாளவிகா மேனன் பகிர்ந்துள்ளார்.
மாளவிகா மேனன்
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயின் தங்கையாக நடித்தவர் நடிகை மாளவிகா மேனன்.
அதனை தொடர்ந்து விழா, பிரம்மன், வெத்துவேட்டு, நிஜமா நிழலா, பேய் மாமா, அருவா சண்ட உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறா தொடர்ந்து அதிகப்படியான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பட வாய்ப்பு
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், 2011 ஆம் ஆண்டு நான் சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டேன் என்றாலும் எனக்கு தொடர்ந்து படங்கள் அமையவில்லை. இதற்கு முக்கியமான காரணம் நல்ல பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் செய்த தவறுதான் நிறைய படங்களில் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
ஆனால் கதை கேட்கும் பொழுது என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாதது போல ஒரு பிம்பம் ஏற்படும். கதை குறித்து திரைக்கதை குறித்தும் எனக்கு சரியான புரிதல் இல்லை. அப்படி நிறைய படங்களை நான் தவற விட்டு இருக்கிறேன்.
ஆனால், அந்த படங்கள் வெளியான பிறகு பார்த்தால் எனக்கு கூறப்பட்ட அந்த கதாபாத்திரத்தின் தன்மை மிகவும் இன்றியமையாததாக, வலுவனாதாக இருக்கும். இந்த படத்தை தவற விட்டு விட்டோமே என்ற ஏங்கி இருக்கிறேன்.
அதன் பிறகு நாட்கள் செல்லச் செல்ல கதை திரைக்கதை இவற்றை புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் செய்த அந்த தப்பை நான் இப்போது சரி செய்து கொண்டேன் இதை சொல்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video