எங்க பாவம் உங்களை சும்மா விடாது... - சரண்யா பொன்வன்னணை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்...!
சரண்யா பொன்வன்னண்
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யாதான். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
இவர் தமிழில் 1987ம் ஆண்டு முதன்முதலாக மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான ‘நாயகன்’ படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாய் அறிமுகமானார். இதனையடுத்து, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்தார். இதனையடுத்து, நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து செட்டில் ஆனார் சரண்யா.

வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்
இவருடைய நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள படம் ‘அருவா சண்ட’. இப்படம் ஆதிராஜன் என்பவர் இயக்க, ராஜா என்பவர் தயாரித்து நடிக்கவும் செய்தார். அதுபோக நடிகை மாளவிகா மேனன் , ஆடுகளம் நரேன் உட்பட பல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் சரண்யா பொன்வன்னன் அம்மாவாக நடித்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் புரோமோஷன் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த புரோமோஷனுக்கு சரண்யாவை அழைக்க தயாரிப்பாளரும் நடிகருமான ராஜா போயுள்ளார். ஆனால் சரண்யா ஷூட்டிங் இருக்கிறது வரமுடியாது என சொல்லிவிட்டாராம். ஆனால் அன்றைக்கு ஷூட்டிங் இல்லையாம். வீட்டில் தான் இருந்துள்ளார் சரண்யா.
இதனால் கடுப்பான இளம் தயாரிப்பாளர், இதுவே தனுஷ்,சூர்யா பட புரோமோஷன் என்றால் இவர் போகாமல் இருப்பாரா? சின்ன பட்ஜெட் படம் என்பதால்தானே வராமல் இப்படி பண்றார். எங்க பாவம் சும்மா விடாது என்று அவரும், வந்திருந்த மற்ற தயாரிப்பாளர்களும் சரண்யாவை வெளுத்துவாங்கி உள்ளனராம்.
எதிர்கட்சி காட்டுகின்ற இந்த பூச்சாண்டி வேலைகளை மக்கள் நம்பப் போவதில்லை: பிரபு எம்.பி சாடல் IBC Tamil
பிள்ளையானின் வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்! CID விசாரணையில் அம்பலம் IBC Tamil