என் புருஷனுக்கு முடி இல்லைதான்; ஆனால் எனக்கு அதுபோதும் - மதுபாலா பளீச்!

Madhoo Tamil Cinema
By Sumathi Dec 07, 2023 05:30 PM GMT
Report

நடிகை மதுபாலா தனது கணவர் மற்றும் காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை மதுபாலா

அழகன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மதுபாலா. தொடர்ந்து, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தார். ரோஜா படத்தின் மூலம் பிரபலமானார்.

actress madhubala

ஆனந்த் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலானார். அதன்பின் வாயை மூடி பேசவும், பிரியாணி, தேஜாவு உள்ளிட்ட படங்கள் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் திரைத்துறைக்குள் நுழையும்போது கண்டிப்பாக ஒரு நடிகரைத்தான் திருமணம் செய்வேன் என்று எதிர்பார்த்திருந்தேன்.

என் கணவரை தாத்தாவானு கேட்குறாங்க - கண் கலங்கிய பிரபல நடிகை

என் கணவரை தாத்தாவானு கேட்குறாங்க - கண் கலங்கிய பிரபல நடிகை

திருமண வாழ்க்கை

ஆனால் எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஆனந்த்திற்கு ஃபேண்டசியாக எல்லாம் காதலிக்க தெரியாது. ஆனால் காதலுக்கு அவர் உண்மையாக இருப்பார். ஒவ்வொரு சண்டையிலும் நான் எல்லை மீறி பேசினால் அதனை சரியாக புரிந்துகொண்டு அணுகுவார்.

madhubala family

நான் எப்படி இருப்பேனோ அதேபோன்றுதான் அவரும். அவருக்கு முடி இல்லாதது அவருக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்திருந்தது. என்னிடம் காதலை சொல்லும்போதுகூட அவருக்கு முடி இல்லை. ஆனால் அது எனக்கு ஒரு பிரச்னையாக தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.