என் கணவரை தாத்தாவானு கேட்குறாங்க - கண் கலங்கிய பிரபல நடிகை
தன் கணவரின் தோற்றத்தை கிண்டல் செய்வதாக நடிகை நீலிமா வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகை நீலிமா
கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் அதிரடி காட்டி வருகிறார்.
வேதனை
சமீபத்தில் தியேட்டரில் வெளியான ஆகஸ்ட் 16 1947 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், என் கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பதால் எல்லோரும் அவரை தாத்தானு சொல்லி கிண்டல் பண்றாங்க.

அவருக்கு டை அடித்துக்கொள்வதில் விருப்பம் இல்லை. நானும் என் கணவர் இயல்பாக இருக்கவே விரும்புகிறேன். அதனால் விமர்சனங்கள் பற்றி கவலைப்படுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை IBC Tamil
அதிகாரிகள் மீதான மரணதண்டனை தீர்ப்பால் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் : ஸ்ரீநேசன் எம்.பி கிண்டல் IBC Tamil