‘ரோஜா’ படத்தை பார்த்து என்னை நானே செருப்பால் அடித்துக் கொண்டேன்... - பிரபல நடிகை குமுறல்
1992ம் ஆண்டு வெளியான படம்தான் ‘ரோஜா’. இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் அரவிந்தசாமி, மதுபாலா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளார் மணிரத்னம். இந்திய அளவில் இந்தப் படம் பல விருதுகளை வாங்கி தந்துள்ளது.
இந்த படத்தில் கண் கவரும் காஷ்மீர் காட்சிகளும், கடத்தல் காட்சிகளும் நெஞ்சை அள்ளும் வகையிலும் த்ரில்லாகவும் தந்தார் மணிரத்னம்.
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர்.ரகுமான் இசையில் இப்படம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பேசப்படும்.
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
‘ரோஜா’ படத்தில் கதை எழுதியதும் நாயகியாக நடிக்க வைக்க முதலில் என்னை தான் மணிரத்னம் சார் கேட்டார். ஆனால், அப்போது எனக்கு தெலுங்கு படத்திற்காக முன்பணம் வாங்கி விட்டேன். அதனால், ‘ரோஜா’ படத்தில் நடிக்க முடியாது என்று மணிரத்னமிடம் கூறிவிட்டேன். ஆனால் தெலுங்கு படம் டிராப் ஆகிவிட்டது. இதன் பின்னர், திரையில் ‘ரோஜா’ படத்தை பார்த்த போது என்னை நானே செருப்பால் அடித்துக் கொண்டேன். இன்று வரை, இந்த மாதிரியான ஒரு படத்தில் நடிக்க தவறியதை நினைத்து இப்பவும் நான் கவலைப்படுகிறேன்.
இவ்வாறு உருக்கமாக பேசினார்.