5 வருஷ லவ்.. அதை பண்ணதே இல்லை, ஏன் கல்யாணம் செய்தோம்னு வருந்தினேன் - குஷ்பூ ஓபன் டாக்!
நடிகை குஷ்பூ தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்டையாக பேசியுள்ளார்.
குஷ்பூ
தமிழ் சினிமாவில் 90ஸ் களில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர், ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என டாப் நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
பின்னர் இயக்குநர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து கலக்கிவந்தார். இவர் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார், மேலும், அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்.சி பற்றி கூறியுள்ளார். அதில் அவர், "நானும் சுந்தர் சியும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் காதலித்தோம். அதன் பின்னர்தான் திருமணம் செய்து கொண்டோம். எங்களுடைய குடும்ப வாழ்க்கையில் எப்பொழுதுமே இன்பம் மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது.
சராசரி தம்பதிகள் போல சண்டைகள் வரும். எங்கள் இரண்டு பேருக்கும் இடையே உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், நீ எனக்காக இப்படி மாறு..நான் உனக்காக அப்படி மாறுகிறேன் என்று ஒருவருக்கொருவர் சொன்னதே கிடையாது. ஒருவரை ஒருவர், நாங்களே நன்றாக புரிந்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்தோம்.
எங்களைப் பொறுத்தவரை நம்பிக்கைதான் வாழ்க்கை. என்னுடைய வாழ்க்கையிலும், ஒரு கட்டத்தில் ஏன் இவரை கல்யாணம் செய்து கொண்டோம் என்று நினைத்த காலம் வந்திருக்கிறது. அவருக்கும் அதே போன்றதொரு காலம் வந்திருக்கிறது.
ஆனால் அந்த சமயங்களில் எல்லாமே ஒருவரின் மீது ஒருவர் வைத்திருந்த காதல், அன்பு உள்ளிட்டவை எங்களை இவ்வளவு வருடங்கள் பயணிக்க வைத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.