Saturday, May 31, 2025

என் அன்புக்குரிய அண்ணா! - கண்ணீருடன் குஷ்பூ வெளியிட்ட உருக்கமான பதிவு

Twitter Kushboo Death
By Nandhini 2 years ago
Report

நடிகை குஷ்பூவின் மூத்த சகோதரர் அபுபக்கர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பூ உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை குஷ்பூ

தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் இன்று வரை நீங்கா இடம் பிடித்து வருகிறார்.

எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குஷ்பூவிற்கு கோயில் கட்டும் அளவிற்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். நடிகை குஷ்பூ, இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். 2 மகள்கள் உள்ளனர்.

பிரார்த்தனை செய்யுங்கள்..

இந்நிலையில், சமீபத்தில் நடிகை குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், என்னுடைய மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். வெண்டிலேட்டரில் கடந்த 4 நாட்களாக இருக்கிறார். இன்று அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்தது. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டார். இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வந்தனர்.

kushboo-twitter-brother-death

என் சகோதரனின் பயணம்

தற்போது, நடிகை குஷ்பூ மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் தன் அண்ணன் இறந்து விட்டார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது குறித்து அந்த பதிவில், உலகை விட்டு பிரிந்த சோகம். உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரம் வரும்.

என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது.அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் நமக்கு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. சாந்தியடைய என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பூவின் அண்ணன் இறந்த செய்தியைக் கேட்டு சினிமாத்துறையினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சினிமாத்துறையினரும், ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் குஷ்பூவிற்கு ஆறுதல் கூறியும், இரங்கல் தெரிவித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.