முதலில் மகன், பிறகு கணவர்.. 3 முறை தற்கொலைக்கு முயன்றேன் - கண்ணீர்விட்டு கதறிய நடிகை!
நடிகை தனது வாழ்வில் நிகழ்ந்த கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை கவிதா. இவர், 1976 ஆம் ஆண்டு ஓ மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிகர் விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு மற்றும் அஜித்தின் அமராவதி போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர், இவர் பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் சமீப காலமாக சீரியல்களில் அம்மா மற்றும் வில்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர், "கொரோனா சமயத்தில் எங்கள் வீட்டில் பாட்டி, மகன் உட்பட ஏழு பேருக்கும் கொரோனா தொற்று உருவானது. அப்போது என்னுடைய மகனும் கணவரும் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருந்தனர்.
எல்லோருமே முறைப்படி மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அது என்னுடைய மகனுக்கும் கணவருக்கும் பயனளிக்கவில்லை. முதலில் என்னுடைய மகன் உயிரிழந்து விட்டான்.
எனக்கு அந்த நேரத்தில் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது. சில நாட்களில் என்னுடைய கணவரும் உயிர் இழந்துவிட்டார். அந்த நேரத்தில் நான் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். இரண்டு மகள்களுக்காகத் தான் நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.