என்னோட இந்த நிலைமைக்கு காரணம் பாண்டியராஜன் தான் - நடிகை தீபா
கஷ்ட காலத்தில் தனக்கு வாய்ப்பு குடுத்து தூக்கிவிட்டவர் பாண்டியராஜ் தான் என்றும், தான் தீபா அக்கா என்று பிரபலம் ஆனதற்கு காரணம் நடிகர் கார்த்தி என்றும் அவர் மனம் கலங்கி கூறியுள்ளார்.
தழு தழுக்க பேசிய தீபா
பிரபல சீரியல் நடிகை தீபா சமீபத்தில் கொடுத்த பேட்டியில், அவரது வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை பகிர்ந்துள்ளார்,
அதில் அவர் தனது மகனுக்கு சரியாக காது கேட்காததால் பேச்சு வராமல் இருந்தது அப்பொழுது அவர் உறவினர் சிலர் மலையில் மேல் இருக்கும் சாமியாரை பார்த்தால் போதும் பேச்சு வந்துவிடும் என்று கூறியதை கேட்டு, அங்கு சென்றிருக்கிறார்.
அப்பொழுது அந்த சாமியார் நான் என்ன டாக்டரா, என் காலில் விழுந்து வணங்குங்கள் என்று கூறியுள்ளார். பிறகு அவர் குங்குமத்தை குடுத்து, இதை பாலில் கலந்து கொடுக்குமாறு கூறியிருக்கிறார், ஆனாலும் ஏதுவும் குணமாகவில்லை மருத்துவத்தில் தான் குணமானது என்று அவர் கூறினார்.
கண்ணீர் விட்டு கதறிய தீபா தனது வாழ்வில் அதிக மன அழுத்தத்திலும் கஷ்டத்திலும் இருந்தபொழுது இவருடைய அம்மா அவரது குடும்ப கோவிலுக்கு சென்று வருமாறு கூறியுள்ளார்.
இவர் அங்கு சென்று சாமியை பார்ததும் கண்ணீர் விட்டு தனது கஷ்டத்தை கூறி கதறியுள்ளார், தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி அழுதுள்ளார். அப்பொழுது தான் பாண்டியராஜனிடம் இருந்து 'உங்களை பார்க்கவேண்டும்' என்று அழைப்பு வந்தது.
வாய்ப்பு கொடுத்த பாண்டியராஜன்
அதன் பிறகு தான் அவருக்கு நடிகர் கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்பொழுது தான் முதன்முதலாக நடிகர் கார்த்தி தன்னை தீபா அக்கா என்று அழைக்கத் தொடங்கினார் என்றும், அதன் பிறகு தான் தீபா அக்கா என்று பிரபலம் ஆனேன் அது எனக்கு சந்தோசமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
மேலும் கடவுள் மீது எல்லோருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும், அது மட்டும் போதாது தன் வீட்டில் இருக்கும் பெரியவர்களையும் நன்றாக பார்த்து கொண்டாலே போதும் நமக்கு எல்லாம் தானாக நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
