இசையில் பிசியாக இருந்த இமான்.. நைட் பார்ட்டிக்கு சிவாவுடன் சென்ற மனைவி? - பகீர் கிளப்பிய பிரபலம்!
இமான் தனது மனைவியை நைட் பார்ட்டிக்கு அனுப்பிவைத்தது குறித்து பேசியுள்ளார்.
சிவா - இமான் சர்ச்சை
தமிழ் சினிமாவின் முன்னணி இசை இயக்குனரான இமான் தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் கூறினார். அதன்பிறகு இது குறித்து பலர் பலவிதமாக பேசி சர்ச்சையை கிளப்பினர்.
பிரபலம் பேட்டி
இந்நிலையில், பத்திரிகையாளர் பாண்டியன் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிவகார்த்திகேயன் உடன் ஒரு நைட் பார்ட்டியில் இமானின் மனைவி இருந்துள்ளார். இமான் அந்த நேரத்தில் இசையமைப்பதில் பிஸியாக இருந்ததால் தன்னால் வரமுடியாது என்று கூறியுள்ளார்.
சினிமாவில் இருப்பவருக்கு இரவு விருந்தில் என்ன நடக்கும் என்பது தெரியாதா?.. அப்படி தெரிந்தும் எதற்காக தன்னுடைய மனைவியை அனுப்பி வைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.