ரஜினியுடன் ரகசிய திருமணம்?.. முதன்முறையாக மனம் திறந்த பிரபல நடிகை!
நடிகை தனக்கு ரஜினியுடன் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை கவிதா. இவர், 1976 ஆம் ஆண்டு ஓ மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இவர் நடிகர் விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு மற்றும் அஜித்தின் அமராவதி போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர், இவர் பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் சமீப காலமாக சீரியல்களில் அம்மா மற்றும் வில்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர், "ரஜினியுடன் பல படத்தில் சேர்ந்து நடித்தால், ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம் நடந்து விட்டது என்று ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியானது. அப்போது நான் மோகன் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன்.
மேக்கப் மேன் தான் அந்த பத்திரிக்கையை எங்களிடம் காட்டினார். அப்போது நான் வளர்ந்து வரும் நடிகையாக இருந்ததால், மோகன் பாபு மிகவும் வருத்தப்பட்டார். அப்போது நாங்கள் அனைவரும் அந்த பத்திரிக்கை அலுவலத்திற்கே நேராக சென்று,
பொய்யான செய்தியை ஏன் போடுறீங்க என்று சண்டை போட்டோம் அப்போது அந்த பத்திரிக்கை தவறை ஏற்றுக்கொண்டு மறுப்பு போடுவதாக சொன்னார்கள். அதற்குள் இந்த செய்தி காட்டுத்தீ போல எங்க வீடுவரை சென்று, வீட்டில் இருந்து போன் வந்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்" என்று கூறியுள்ளார்.