விஜய்யின் முதல் காதலி அவங்கதான்; ஆனால் திருமணம்.. உண்மை உடைத்த நடிகை கெளசல்யா!
நடிகர் விஜய் குறித்து கெளசல்யா பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
நடிகை கெளசல்யா
தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கெளசல்யா. நடிகர் விஜய்யுடன் நேருக்கு நேர், ப்ரியமுடன், விஜயகாந்துடன் வானத்தை போல படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
43 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் திருமணத்தை எதிர்ப்பவள் இல்லை, என்னுடைய கருத்துக்கு ஏற்ப பிடித்தமான ஒருவரை இன்னும் நான் சந்திக்கவில்லை.
விஜய்யின் முதல் காதலி?
ஒருவர் மட்டும் என் வாழ்க்கையில் வந்தார். ஆனால் சில காரணங்களால் பிரேக் அப் ஆகிவிட்டது. படங்களில் பிஸியாக நடித்து வந்த சமயத்தில் நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டது. இதனால் நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால் திடீரென உடல் எடை அதிகம் ஆகிவிட்டது. இந்த விஷயத்தால் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன்.
மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. எனக்கு விஜய்யுடன் சேர்ந்து நடித்த ’பிரியமுடன்’ எனக்கு மிகவும் பிடித்த படம். விஜய் தான் என்னுடைய க்ரஷ். படப்பிடிப்பில் விஜய்யுடன் நான் நிறைய உரையாடி இருக்கிறேன். விஜய்யின் முதல் காதலி யார் என்று எனக்கு தான் முதலில் தெரியும். கடைசியாக அவரையே விஜய் திருமணமும் செய்து கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video