கிரிக்கெட்டருடன் பிரேக் அப்....அதனால் தான் திருமண செய்துகொள்ளவில்லை....கௌசல்யா ஓபன் டாக்
90-களில் பிரபலமாக இருந்த நடிகை கௌசல்யா, தான் எந்த காரணத்தினால் திருமண செய்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.
நடிகை கௌசல்யா
தமிழில் இவர் நடிகர் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் அறிமுகமான கௌசல்யா அந்த படத்தில் கௌசல்யா என்ற கேரக்டரில் நடித்ததன் காரணமாகவே கௌசல்யா என்று அழைக்கப்பட்டு வருகின்றார்.இவரின் இயற்பெயர் நந்தினியாகும். முதல் படமே பெரிய வெற்றி படமாக அமைய அடுத்தடுத்து கௌசல்யா தொடர் வெற்றி படங்களில் நடித்தார்.
நடிகர் விஜய்யுடன் நேருக்கு நேர், ப்ரியமுடன், விஜயகாந்துடன் வானத்தை போல படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்து முன்னணி நாயகியாக முன்னேறினர். பின்னர் திடீரென வாய்ப்புகள் குறைய அடுத்து சிறு சிறு கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகின்றார் கௌசல்யா. 43 வயதான நடிகை கௌசலையை தற்போதும் திருமண செய்து கொள்ளாமலே வாழ்த்து வருகின்றார்.
கிரிக்கெட்டாருடான பிரேக் அப்
இந்நிலையில், நடிகை கௌசல்யா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர் இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். தான் திருமணத்தை எதிர்ப்பவள் இல்லை என கூறி, திருமணம் என்பது ஒரு அழகான விஷயம் என குறிப்பிட்ட கௌசல்யா, தனக்கும் தன் கருத்துக்கும் பிடித்தமான ஒருவர் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
ஆனால், அப்படி ஒருவர் தன் வாழ்க்கையில் இருந்தார் என கூறிய கௌசல்யா, ஆனால் அது பிரேக் அப் ஆகிவிட்டது என்று இப்போது தான் தன் பெற்றோருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும், அந்த பேட்டியில் தான் பிஸியாக நடித்து கொண்டிருந்த போது, தான் பிரபல கிரிக்கெட்டர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவருக்கும் தனக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது என்றும் கூட செய்திகள் வந்தது என சுட்டிக்காட்டிய கௌசல்யா, தற்போது அந்த கிரிக்கெட்டர் பெயர் கூட இப்போது தனக்கு மறந்து விட்டது என கூறினார்.