43 வயசாகியும் கல்யாணம் ஆகல; சீரழித்த நரம்பு நோய் - நடிகை கெளசல்யா வேதனை!

Kausalya
By Sumathi Sep 21, 2023 05:30 PM GMT
Report

வாழ்க்கையில் தான் சந்தித்த துயரங்கள் குறித்து நடிகை கெளசல்யா மனம் திறந்துள்ளார்.

நடிகை கெளசல்யா 

தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கெளசல்யா. நடிகர் விஜய்யுடன் நேருக்கு நேர், ப்ரியமுடன், விஜயகாந்துடன் வானத்தை போல படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

43 வயசாகியும் கல்யாணம் ஆகல; சீரழித்த நரம்பு நோய் - நடிகை கெளசல்யா வேதனை! | Actress Kausalya About Marriage Health Issue

43 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நான் கல்யாணத்திற்கு எதிரானவள் அல்ல. நீங்கள் ஒரு சரியான நபரை தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்றால் கல்யாணம் மிக அழகானது.

நரம்பு நோய்

ஆனால் நான் என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். சில நேரங்களில் நாம் பெற்றோருடன் இருப்பதே நல்லது என்று தோன்றும். சில சமயங்களில் ரிலேஷன் ஷிப்பில் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்த போதும் கூட, பெற்றோருடன் இருந்த நெருக்கம் என்னை திசை திருப்பி இருக்கின்றன.

43 வயசாகியும் கல்யாணம் ஆகல; சீரழித்த நரம்பு நோய் - நடிகை கெளசல்யா வேதனை! | Actress Kausalya About Marriage Health Issue

கூடவே நான் உடல்நலம் சரியில்லாமல் ஆகி விட்டேன். எனக்கு நரம்பு சம்பந்தமான நோய் வந்து விட்டது. அதன் விளைவு நான் அதிகமாக சாப்பிட ஆரம்பித்தேன். குளுக்கோஸ் குடித்துக்கொண்டே இருப்பேன். அந்த நேரத்தில் எனக்கு சரியான மருத்துவர்கள் கிடைக்க வில்லை. யாருக்கு என் உடலில் என்ன நடக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆகையால் நான் நிறைய வெயிட் போட்டு விட்டேன். இதனால் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரேக் எடுத்து மீண்டும் சென்றேன். இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்தேன். ஆனால் அது எனக்கு மகிழ்ச்சியைக்கொடுக்க வில்லை. அதனால் விலகினேன். தற்போது நலமாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.