பாலிவுட்டில் வெற்றி..அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்- வேட்பு மனு தாக்கல் செய்த கங்கனா!
நடிகையும் மண்டி தொகுதி பாஜக வேட்பாளருமான கங்கனா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அரசியலில் வெற்றி
தமிழில் ஜெயம் ரவியின் "தாம் தூம்" படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், அரசியலிலும் ஈடுபாடு காட்டுகிறார். மேலும், தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட "தலைவி" மற்றும் சந்திரமுகி 2 படத்திலும் கங்கனா நடித்திருந்தார்.
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றார். இந்த நிலையில், நடிகை கங்கனா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பாலிவுட் கங்கனா
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”பாலிவுட்டில் வெற்றி பெற்ற நான், அரசியலிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார். இந்த மக்களவை தேர்தலில் அவர் வேட்பாளராக நியமனம் ஆனதில் இருந்து அவருடைய பேச்சுகள் இணையவெளியில் கேலிக்குள்ளானது.
தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி கொண்டே இருக்கிறார்.அதாவது, மோடி 2014-ல் பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது, அமிதாப்பச்சன் போல தனக்கு மட்டும்தான் மக்கள் மத்தியில் அன்பு கிடைக்கிறது என பல விஷயங்களைப் பேசி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.