"இந்து ராஷ்டிரம்" 1947'இல் ஏன் அறிவிக்கவில்லை? 2014-இல் தான் சனாதன சுதந்திரம் - கங்கனா
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக வேட்பாளராக மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
கங்கனா ரணாவத்
தமிழில் ஜெயம் ரவியின் "தாம் தூம்" படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், அரசியலிலும் ஈடுபாடு காட்டுகிறார். மேலும், தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட "தலைவி" மற்றும் சந்திரமுகி 2 படத்திலும் கங்கனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றார்.
சர்ச்சை
தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பேசி வரும் அவர் தற்போது மற்றுமொரு விமர்சனத்திற்குள்ளான கருத்துக்களை பிரச்சாரத்தில் பேசியுள்ளார். இமாச்சலின் குலு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய கங்கனா, 1947'இல் மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட போது, ஏன் இந்தியா ‘இந்து ராஷ்டிரம் என அறிவிக்கப்படவில்லை என வினவினார்.
நம் முன்னோர்கள், முகலாயர்கள் - ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அடக்குமுறைக்கு ஆளாகினர் என்ற கங்கனா, பின்னர் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியையும் பார்த்தார்கள் என சுட்டிக்காட்டி, நமக்கான அசல் சுதந்திரம் 2014-ல் தான் கிடைத்தது என்றார்.
சிந்திக்கும் - சனாதன - மத சுதந்திரம் 2014'இல் தான் கிடைத்தது என்ற கங்கனா, இந்த தேசத்தை இந்து தேசமாக ஆக்குவதற்கான சுதந்திரம் அது என்றும் சூளுரைத்தார். கங்கனாவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.