கங்கனா சொன்னால் - அவருக்காக பிரச்சாரம் செய்கிறேன்!! முன்னாள் காதலரின் தந்தை

BJP Kangana Ranaut Himachal Pradesh Lok Sabha Election 2024
By Karthick May 08, 2024 09:05 AM GMT
Report

நடிகை கங்கனா மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

கங்கனா ரணாவத்

தமிழில் ஜெயம் ரவியின் "தாம் தூம்" படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், அரசியலிலும் ஈடுபாடு காட்டுகிறார். மேலும், தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட "தலைவி" மற்றும் சந்திரமுகி 2 படத்திலும் கங்கனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kangana Ranaut BJP campaining

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றார்.

பிரதமர் மோடியின் கண்ணை பாருங்கள் - அது தான் அவரோட ஸ்பெஷல்...! கங்கனா ரணாவத் புகழாரம்..!

பிரதமர் மோடியின் கண்ணை பாருங்கள் - அது தான் அவரோட ஸ்பெஷல்...! கங்கனா ரணாவத் புகழாரம்..!

பிரச்சாரம் செய்ய தயார் 

சில நாட்கள் முன்பு, தேசத்தின் பிரதமர்கள் குறித்து கங்கனா பேசிய கருத்துக்கள் பெரும் விமர்சனத்தை பெற்றிருந்தன. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கங்கனா முன்னர் டேட்டிங் செய்த நடிகரான அத்யா சுமனின் தந்தை கங்கனாவிற்காக பிரச்சாரம் செய்ய தயார் என அறிவித்துள்ளார்.

kangana ranaut ex bf dad says ok to campaign

சேகர் சுமன் நேற்று தான் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கங்கனா என்னை அழைத்தால், நிச்சயம் அவருக்காக பிரச்சாரம் செய்வதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை என்று குறிப்பிட்ட சேகர் சுமன், சொல்லப்போனால் என் உரிமையும் கூட என்றார்.