அவர தான் காதலிக்கிறேன்; கல்யாணமாகி குடும்பத்தோடு இருக்காரு - நடிகை கங்கனா பகீர்!
தான் தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத்
தாம்தூம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இதனையடுத்து தமிழில் நடிக்காமல் இருந்த இவர், கடந்த ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றிருந்த கங்கனா, அங்கு தொழில் அதிபர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த தொழிலதிபரை அவர் காதலிப்பதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து கங்கனா விளக்கம் அளித்துள்ளார்.
விளக்கம்
அதில் "தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான் தயவு செய்து பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள்.

அந்த தொழில் அதிபர் திருமணமாகி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். நான் வேறு ஒருவரை காதலிக்கிறோன். அவர் யார் என்பதை தக்க நேரத்தில் அறிவிப்பேன்.
அதுவரை பொறுத்திருங்கள் . இரண்டு பேர் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் அவர்கள் உறவைப் பற்றி தகாத முறையில் பேசுவது சரியல்ல" என்று தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கை புனிதமானது என்றால் மக்கள் ஆணை என்ன மலிவானதா? வடக்கு ஆளுநரின் அதிகார வெறி உச்சம் IBC Tamil
ஈரானுக்கு வழங்கப்பட்ட 60 நாட்கள் தடைத் தளர்வு தற்காலிகமானது...! அமெரிக்கா இறுதி எச்சரிக்கை IBC Tamil