அவருக்கு திருமணமாகிட்டு; டேட்டிங் செய்து வருகிறேன் - உறுதிசெய்த பிரபல நடிகை!
நடிகை கங்கனா ரனாவத் டேட்டிங் செய்து வருவது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர்தான் நடிகை கங்கனா ரனாவத். இந்தி தவிர மற்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்துவதில் சிறிதும் தயங்காதவர்.

அதேபோல், சர்ச்சைக்கு பெயர்போனவர் என்றும் கூறலாம். அரசியல் ரீதியாக அடிக்கடி கருத்துகளை வெளியிடுவதால் கடுமையாக விமர்சிக்கப்படுவார். தமிழில் இறுதியாக சந்திரமுகி 2ம் பாகம் படத்தில் நடித்திருந்தார்.
டேட்டிங்
சமீபத்தில், அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் ‘ஈஸி மை டிரிப்’ இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டியுடன் புகைப்படம் எடுத்திருந்தார். அது வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ள கங்கனா, " தவறானத் தகவலைப் பரப்பாதீர்கள். நிஷாந்த் ஜிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. நான் வேறொருவரை டேட் செய்து வருகிறேன். அதை சரியான நேரம் வரும்போது நானே சொல்கிறேன். அதுவரை எங்களை இணைத்து வைத்துப் பேசாதீர்கள்.
ஒருவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்பதாலேயே அவருடன் இணைத்து வைத்துப் பேசாதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil