பில்கிஸ் பானு துயரத்தை படமாக்கும் கங்கனா ரனாவத் - நிராகரிக்கும் ஓடிடி தளங்கள்!
பில்கிஸ் பானுவின் வழக்கை திரைப்படமாக எடுப்பதற்கு கதை தயாராக இருப்பதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பில்கிஸ் பானு வழக்கு
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தண்டனை காலத்திற்கு முன்பே 2022 ல் குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது.
இவர்களுக்கு இந்து அமைப்பினை சேர்ந்த சிலர் மாலை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விடுதலையை எதிர்த்து சட்டபோராட்டத்தில் ஈடுபட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் குஜராத் அரசு அதிகாரத்தை தவறாக உபயோகித்து உள்ளது.
கங்கனா ரணாவத்
இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேரும் மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவளித்தது. இந்நிலையில், கங்கனா ரனாவத் வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் பில்கிஸ் பானுவின் வழக்கினை படமாக எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த கங்கனா ரனாவத் பில்கிஸ் பானுவின் வழக்கு தொடர்புடைய கதை 3 வருடங்களாக ஆய்வுசெய்து ஸ்கிரிப்ட் தயாராகயுள்ளது.
இந்த கதையில் அரசியல் சார்ந்த சிக்கல்கள் உள்ளதால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஒருசில ஓடிடி தளங்கள் தயாரிக்க நிராகரித்துவிட்டன. ஜியோ சினிமா நிறுவனம் நான் பாஜகவினை ஆதரிப்பதால் சேர்ந்து வேலை செய்ய நிராகரித்துவிட்டது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது? என்றுக் குறிப்பிட்டுள்ளார்.