வீடு புகுந்து அடிப்பேன்.. பிரபல நடிகரை மிரட்டிய கங்கனா ரனாவத்... - ஷாக்கான ரசிகர்கள்..!
நடிகை கங்கனா ரனாவத்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர்தான் நடிகை கங்கனா ரனாவத். இந்தி தவிர மற்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.
கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றுள்ளார். சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்துவதில் சிறிதும் தயங்காதவர். இவர் தொகுத்து வழங்கி வந்த ‘லாக் அப்’ நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது.
இதனையடுத்து, மீண்டும் படங்களில் தன்னுடைய கவனம் செலுத்தி வருகிறார். கங்கனா ரனாவத் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தலைவி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ஆக்ஷன் நாயகியாக கங்கனா நடித்துள்ள ‘தாகத்’ சமீபத்தில் வெளியானது.
அந்த நடிகர் வேவு பார்க்கிறார்
சமீபத்தில் பிரபல நடிகர் தனது மனைவியை தன்னை போன்று முன்னணி நடிகையாக்கவும், தயாரிப்பாளராக்கவும் வேவு பார்ப்பதாக குற்றம் சாட்டினார். கங்கனா ரனாவத் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் இருந்த போதும், womaniser and Casanova Husband என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் இவர், நடிகர் ரன்பீர் கபூரையும், நடிகை ஆலியா பட்டையும் தான் கூறுகிறார் என்று கமெண்ட் செய்து வந்தனர். கங்கனாவின் இந்த குற்றச்சாட்டுக்கள் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வீடு புகுந்து அடிப்பேன்
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை தற்போது பதிவிட்டுள்ளார்.
அதில், என்னைப் பற்றி கவலைப்படுபவர்கள், நேற்றிரவு முதல் என்னைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள்.
கேமராக்கள் அல்லது வார்த்தைகளால் சொல்வதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, விஷயங்களைப் புரிய வைக்க வேறு வழி தேவை. சரியாக இருந்து கொள்ளுங்கள் நான் எச்சரிக்கிறேன். இல்லாவிட்டால் நான் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களை அடிப்பேன்.
என்னை பைத்தியம் என்று அழைப்பவர்களுக்கு கூட, நான் எந்த அளவிற்கு செல்வேன் என்பது எனக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் ஒரு வாள் ஈமோஜயையும் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil