இவர்தான் நடிகை கங்கனாவின் காதலர்? வைரலாகும் புகைப்படம்!
நடிகை கங்கனா ரனாவத் நபர் ஒருவருடன் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
கங்கனா ரனாவத்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர்தான் நடிகை கங்கனா ரனாவத். இந்தி தவிர மற்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்துவதில் சிறிதும் தயங்காதவர்.

அதேபோல், சர்ச்சைக்கு பெயர்போனவர் என்றும் கூறலாம். அரசியல் ரீதியாக அடிக்கடி கருத்துகளை வெளியிடுவதால் கடுமையாக விமர்சிக்கப்படுவார். தமிழில் இறுதியாக சந்திரமுகி 2ம் பாகம் படத்தில் நடித்திருந்தார்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில் கங்கனா ரனாவத் தனது பாய் ஃப்ரெண்டுடன் வலம் வரும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. மும்பையில் இருவரும் ஜோடியாக வலம் வந்துள்ளனர். அந்த நபர் வெளிநாட்டை சேர்ந்தவர். இதுபற்றி கங்கனா ரனாவத் வெளிப்படையாக ஏதும் அறிவிக்கவில்லை.

ஆனால், முன்னதாக ”ஒவ்வொரு பெண்ணைப் போலவும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. நிச்சயமாக, அடுத்த ஐந்து வருடத்திற்குள் நான் திருமணம் செய்து கொள்வேன்.
காதல் திருமணம் அல்லது பெரியோரால் பார்த்து வைக்கப்பட்டத் திருமணம் என எதுவாக இருந்தாலும் எனக்கு சம்மதம்தான்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil