பாஜக சீட் கொடுத்தால் கண்டிப்பா அரசியலில் களமிறங்குவேன்... - நடிகை கங்கனா ரனாவத் அதிரடி
பாஜக சீட் கொடுத்தால் கண்டிப்பா அரசியலில் களமிறங்குவேன் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர்தான் நடிகை கங்கனா ரனாவத். இந்தி தவிர மற்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றுள்ளார். சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்துவதில் சிறிதும் தயங்காதவர்.
இவர் தொகுத்து வழங்கி வந்த ‘லாக் அப்’ நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து, மீண்டும் படங்களில் தன்னுடைய கவனம் செலுத்தி வருகிறார். கங்கனா ரனாவத் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘தலைவி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ஆக்ஷன் நாயகியாக கங்கனா நடித்துள்ள ‘தாகத்’ சமீபத்தில் வெளியானது.

தேர்தலில் போட்டியிட விருப்பம்
இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத் பாஜக சீட் கொடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
மாண்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் என்னிடம் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். பாஜக சீட் கொடுத்தால் கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். இமாச்சல மக்களுக்கு சேவை ஆற்ற வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்துள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil