நபிகள் நாயகம் குறித்து இழிவு பேச்சு; நுபுர் சர்மாவுக்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு
நபிகள் நாயகம் குறித்து இழிவான வகையில் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இழிவான பேச்சு
பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத்தில் முகமது நபி குறித்து இழிவான வகையில் பேசியிருந்தார்.
பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டாலும் முகமது நபி குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அரபு நாடுகளான கத்தார்,ஈரான்,சவூதி அரேபியா,பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
கங்கனா ரனாவத் ஆதரவு
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,நுபுர் சர்மா அவர் கருத்துகளை சொல்ல உரிமை இருக்கிறது.
அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள்.
இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நாங்கள் அன்றாடம் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்.
நீங்களும் அதையே செய்யுங்கள் அதைவிடுத்து டான் ஆக முயற்சிக்காதீர்கள்.இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை.
இங்கே,சீராக இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது.அதை மறந்துவிட்டு பேசுபவர்களுக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன் என்று கூறி நுபுர் சர்மாவிற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.