டுவிட்டரில் வெளியிட்ட பதிவு - கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு

samugam-kangana-ranaut
By Nandhini Nov 21, 2021 09:49 AM GMT
Report

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இதற்கு, கண்டனம் தெரிவித்து, நடிகை கங்கனா ரனாவத்தை சிறையில் தள்ள வேண்டும் அல்லது மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று சிரோமணி அகாலிதளம் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை தனது ஷூவின் கீழ் கொசுக்களைப் போல நசுக்கியதாக இன்ஸ்டாகிராம் பதிவு நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டதற்காக, அவர் மீது அகாலி தள தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை பதிவு செய்த போலீசார் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அகாலி தளம் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா பேசுகையில், கங்கனா ரனாவத் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தானி இயக்கம் என்று தெரிவித்திருக்கிறார் என்றார்.

கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசாங்கத்தை வளைக்கக்கூடும். ஆனால் ஒரு பெண் பிரதமர் அவர்களை தங்களின் காலணியின் கீழ் கொசுக்களை போல நசுக்கினார். அவர் இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் தனது சொந்த உயிரைக் கொடுத்து நாட்டைச் சிதைக்க விடாமல் தடுத்தார். அவர் இறந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் இன்றும் அவரின் பெயரைக் கேட்டால் சிலிர்க்கிறார்கள், அவரைப் போன்ற ஒரு தலைவர் அவர்களுக்குத் தேவை" என பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.